வாணியம்பாடி அருகே சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து காலையில் கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

வாணியம்பாடி அருகே சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து காலையில் கவிழ்ந்து விபத்து.

 

IMG-20250103-WA0003

வாணியம்பாடி அருகே சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து காலையில் கவிழ்ந்து விபத்து. பெண்கள்,சிறுவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் படுகாயம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த புத்தூர் சுகர்மில் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் புத்தாண்டை கொண்டாட வேன் மூலம் ஒகேனக்கல் சென்று ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வேனை  ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் பகுதி சேர்ந்த ஓட்டுநர் மோகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.


அப்போது வேன், வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேனின் முன் பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில் வேனில் பயணம் செய்த சிறுவர் உட்பட 20 -க்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் 

படுகாயம் அடைந்தனர். 


இதனை தொடர்ந்து பகுதி மக்கள் விபத்தில் காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பாகராஜ் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி போதிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு கேட்டுக்கொண்டார்.


புத்தாண்டு முன்னிட்டு சுற்றுலா சென்ற வேன் சாலையில் கவிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad