ஆலடியூர் குலாலர் தெருவில் விளையாட்டு போட்டி. கபடி வீரர்களுக்கு தேமுதிக நிர்வாகி அரியபுரம் இசக்கிமுத்து பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் உமரிக்காடு ஊராட்சி ஆலடியூர் குலாலர் தெருவில்பொங்கல் பண்டிகையினையொட்டி ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இதில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் ஊர் தலைவர் சேகர், நிர்வாகிகள் ராஜேந்திரன், சங்கர் சுப்பு, வீரசேகர், பட்டுராஜ், இளைஞரணி நிர்வாகிகள் பழனி, லெட்சுமணன், மனோ, முத்துராஜ், ராஜா, செல்வம், முரளி, சேகர், ராம்ராஜ், சிவபெருமாள், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தேலும பரிசுகள் வழங்கிய உபயதாரர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக