மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனத்தின் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம, வார்டு மற்றும் பஞ்சாயத்து கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மாநில காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் து. ஜா. பால் நல்லதுரை அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன், மானாமதுரை கிழக்கு வட்டார தலைவர் காசிராமலிங்கம் மற்றும் மேற்கு வட்டார தலைவர் பாண்டிவேல், இளையான்குடி மேற்கு வட்டார தலைவர் செல்லபாண்டியன், திருப்புவனம் வட்டாரம் பூவந்தி மாரிமுத்து, திருப்புவனம் நகரத் தலைவர் என்.எஸ்.பி நடராஜன், திருப்புவனம் வட்டார பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், மகிளா காங்கிரஸ் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மைதுறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக