ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறும் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும், அவரை காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ள கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ ., அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அவைத்தலைவர் திரு.க.நடராசன்
அவர்களின் தலைமையிலும், வடக்கு மாநகர திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடி. மு.நாகராசன், முன்னிலையிலும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் வடக்கு மாநகர மாணவரணி நிர்வாகி செ.திலக்ராஜ் மற்றும்
மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச பேரவையின் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகள், திமுகவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக