ஆண்டிபட்டி அருகே மயான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்ல முடியாத அவலம்.
ஆண்டிபட்டி அருகே மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வழியில்லாமல் - கழிவுநீரால் தேங்கி, சேரும்,சகதியுமாக காட்சியளிக்கும் ஓடை வழியாக சிரமப்பட்டு இறந்தவர்களின் உடலை கொண்டுசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
60 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பட்டியலின மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மழைக்காலங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி கொள்ளும் போது இறந்தவர்களின் உடலை தண்ணீரில் மிதந்தபடி நடந்து கொண்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பிற சமுதாயத்திற்கு தனி மயானமும், பட்டியலின மக்களுக்கு தனி மயானமும் உள்ளது ஊருக்கு கிழக்குபுறமாக பட்டியலின மக்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள மயானத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தகன மேடை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் மயானத்திற்கான சாலைவசதி தற்போது வரை செய்து கொடுக்கப்படவில்லை இதனால் இப்பகுதியில் ஒவ்வொருவர் உயிரிழக்கும் போதும் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் பல்வேறு பகுதிகளிலிருந்து கழிவு நீர் வந்து தேங்கி சேரும் சகதியுமாக இருப்பதால் ஓடை வழியாக சிரமப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அரை கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர் .
தற்போதைய சூழலில் மழை இல்லாத காலத்தில் கழிவுநீர் தேங்கி சேரும் சகதியுமாக ஓடை காட்சியளிக்கும் நிலையில், மழைக்காலத்தில் ஓடை முழுவதும் தண்ணீர் இடுப்பளவிற்கு தேங்கி கொள்ளும் என்றும்
தண்ணீரில் மிதந்து கொண்டே நடந்து சென்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இந்தப்பகுதி மக்கள் .
தொடர்ந்து இறந்தவர்களின் உடலை ஒவ்வொரு முறையும் மிகுந்த சிரமப்பட்டு அடக்கம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்
உடனடியாக தங்களுடைய மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவோ
அல்லது வேறொரு இடத்தில் மயானத்திற்கு இடம் ஏற்படுத்தி தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இந்தபகுதி மக்கள்,
இனியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ,
கிராமத்தில் இனி ஒருவர் உயிரிழக்கும் போது இறந்தவரின் உடலுடன் ,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக