கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் பாராட்டும் விதமாக வைக்கப்பட்ட பேனர் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதியும் கிளைச் செயலாளருமான கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சார்ந்தவர் தமிழன் ராஜேஷ் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறந்த சமூக சேவகர் டாக்டர் பட்டம் GLOBAL HUMAN PEACE UNIVERSITY நிறுவனம் வழங்கியது அதை பாராட்டும் விதமாக திமுக கழகம் சார்பாக அருமனை சந்திப்பில் பேனர் வைக்கப்பட்டது அதை சுமார் இரவு 10 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிய வந்துள்ளது காரணமாக அருமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து பேனரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக