சமூக சேவகி இந்திராசுந்தரம் அவர்களின் கணவர் நினைவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

சமூக சேவகி இந்திராசுந்தரம் அவர்களின் கணவர் நினைவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

IMG-20250127-WA0000

திருப்பூர் இந்திராசுந்தரம் சமூக சேவை அமைப்பு நிர்வாகி சமூக சேவகி இந்திராசுந்தரம் அவர்களின் கணவர் சுந்தரம் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் உடுமலைபேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உணவுகள் இந்திராசுந்தரம் மற்றும் முதன்மை செயலாளர் ராஜாமுகமது அவர்களும் வழங்கினர். இந்த நிகழ்வு பற்றி அவர் கூறியதாவது


இன்று என் கணவரின் 21-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 

உடுமலைபேட்டை தளி ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பில் ஆன நலத்திட்ட உதவிகள் தலா ஒவ்வொருவருக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட 11 வகை மளிகை பொருட்கள் மற்றும் சேலை, வேஷ்டி, சட்டைகள் வழங்கி சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு 

சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், இனிப்புகளுடன் வழங்கப்பட்டது.

இன்று அங்கு வந்த அனைவரும் என்னை கண் கலங்க வைத்தனர்.

என்னை கட்டி பிடித்து மகளே என்றும், என்னை பெற்ற தாயே என்றும், 

என்னை ஆனந்த கண்ணீரில் அழ வைத்தனர்.

இவர்கள் எல்லாரையும் ஒன்றாக இணைத்த   என் அருமை தம்பி 

ஜானகிராமன் மற்றும் இதர தம்பிகளுக்கும்  பேரன்பு மிக்க நன்றிகள் தெரிவித்தார் .

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad