குடியாத்தம், ஜன 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் வசிக்கும் விவசாயி தரணி இவரது மனைவி பிரியா இவர்களுக்கு ஜெயப்பிரியா
(வயது 3) ஒரு மகளும் ஒன்னரை வயதில் ஒரு மகன் உள்ளார் நேற்று வீட்டின் முன் விளையாடி கொண்ட சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார்கள் சிறுமி கிடைக்கவில்லை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதனால் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தட்டப்பாறை கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தார்கள் இதுவரை குழந்தை கிடைக்கவில்லை இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக