இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேற்றிட கோரி நெற்க் கதிர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடலாடி முதுகுளத்தூர் கமுதி பகுதிகளில் காலதாமதமாக பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்கதிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்கிட கோரியும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்த கோரியும் 2023 2024 ம் ஆண்டு க்கான பயிர் இழப்பீடு உரிய தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்கிட கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வராததால் இராமேசுவரம் இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர். மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக