சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் - போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகே லட்சுமியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது 17) இவர் மேல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக விஷ்ணு காணாமல் போன நிலையில் இது குறித்து அவரது பெற்றோர் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இதனையடுத்து மேல்பட்டி போலீசார் மற்றும் விஷ்ணுவின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் விஷ்ணு பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து மேல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அழிஞ்சிகுப்பம் அருகே கடைசியாக சிக்னல் பதிவான நிலையில் அந்தப் பகுதியில் போலீசார் மற்றும். விஷ்ணுவின் உறவினர்கள் தேடினர் அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றில் விஷ்ணு சடலமாக இருப்பது தெரியவந்தது இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையே விஷ்ணு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விஷ்ணுவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மேல்பட்டி காவல் நிலையம் அருகே மேல்பட்டி பேரணாம்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை எடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன்குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா மண்டல துணை வட்டாட்சியர் குமார் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன்
மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் மேல்பட்டி பகுதியில் சிறிது நேரம் வந்து பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக