தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏரல் வட்டம் முக்காணி பகுதியில் இன்று 07.01.25 பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள  தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருச்செந்தூர் வட்டம் குதிரை மொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வனச்சரக அலுவலர் கவின், வனவர் நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.

அதன் பிறகு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad