கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள பட்டது.
போதையில்லா தமிழகம் அடிப்படையில் கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், பள்ளி போதை தடுப்பு மன்றம் ஆகியன சார்பில் போதை பொருள் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் மணிவாசகம் முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது புகைப்பிடித்தல் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல சிகரேட் போதை வாஸ்து பயன்படுத்துதல் போன்றவை போதைப் பழக்கங்களாகப்படுகிறது. போதை பழக்கத்தால் உடலில் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல், மண்ணீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. புகை பிடித்தல் பழக்கத்தால் பிடிப்பவருக்கும் அவருடன் வசிப்பவர்களுக்கும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சமூக பாதிப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை பாசம் மற்றும் அன்பு மூலம் திருத்த வேண்டும் என்றார்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது போதை பழக்கம் என்பது போதை பொருட்கள் பயன்படுத்துவது மட்டுமல்ல உடலுக்கு மனத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருள் பயன்படுத்தினாலும் அதுவும் போதைப் பழக்கம் தான் அதுவும் மாணவர்கள் மத்தியில் அதிகமாக செல்ஃபன் பயன்படுத்துவதும் போதைப் பழக்கம் தான் இதனால் படிப்பு, உணவு மற்றும் உடல் வளர்ச்சியில் அக்கறை செலுத்த இயலாத சூழல் ஏற்படும். இளைய சமுதாயம் வளம்பெற கல்வியில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து என் ஐ ஐ டி பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார், மற்றும் அஸ்வதி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக