குடியாத்தம் ,ஜன 5 -
குடியாத்தம் பள்ளியை தரம் உயர்த்தி கோரி சட்டமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை மனு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்களிடம் வழக்கறிஞர் கோபி கோரிக்கை மனு வழங்கினார் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப்பள்ளி கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு வருகிறது கடந்த 2000 ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும்போது இடம் கிடைக்க தாமதமாக உள்ளது இப்பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு வேறு பள்ளியில் இடமில்லை என மறுக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் அதிகமானவர்கள் படித்து வருகிறார்கள் இவர்கள் வேறு பள்ளியில் இடம் இல்லை என்றதும் படிப்பை பாதியிலேயே கைவிடப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவே பிச்சனூர் பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை மனுவை சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயனிடம் வழக்கறிஞர் கோபி வழங்கினார் விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக