அன்னூர் நகர அதிமுக சார்பில் எம் ஜி ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், கழக முன்னாள் பொது செயலாளர்
எம்.ஜி. ஆர் அவர்களின் 108 வது ஆண்டு பிறந்த நாள் விழா அன்னூர் நகர அதிமுக சார்பாக பயணியர் மாளிகை முன்பு கழக கொடி ஏற்றி எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் நகர கழக செயலாளர் சௌகத்அலி அவர்கள் கழக கொடியினை ஏற்றினார். மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சரவணன் இனிப்பு வழங்கினார்.
இன்னிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் வெங்கிடுபதி,சித்ரா, சிவராம்குமார், மூர்த்தி,வேலுசாமி,கோபாலகிருஷ்ணன், புருசோத்தமன், செல்வராஜ்,சுப்பிரமணி,
நகர நிர்வாகிகள் மீன் ஆறுசாமி, கதர் பழனிசாமி, இக்பால், ஸ்வீட் முத்து, குப்புசாமி, ரத்தினம், ராஜலக்ஷ்மி,கோபால்,ராஜேஸ்வரி, ஆறுசாமி, ரங்கசாமி, மகேஸ்வரன்,சீனிவாசன்,முத்துசாமி, கதிரேசன், ஈஸ்வரன், நடராஜன், ஜெயராஜ், சிகாமணி,நாகராஜ் ஆண்டவர், ஈஸ்வரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர,ஊராட்சி, வார்டு, மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக