பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கிய உடுமலையார்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கிய உடுமலையார்!


திருப்பூர் ,ஜன 29 -

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கஞ்சம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் அமைச்சரும், அஇஅதிமுக
கழக அமைப்புச் செயலாளரும் ,திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார். உடன் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர். சோமசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். சௌந்தரராஜன், மாவட்ட விவசாய அணி பொருளாளர். பாலச்சந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். முருகசாமி, கிளை கழக செயலாளர். சுப்பிரமணி, கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர். செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தார்கள்.

தமிழக குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad