மதுரை கப்பலூரில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆசிரியர்கள் மற்றும் செய்து வேலை செய்ய சொன்னதால் மாணவனுக்கு கண் பார்வை பறிபோனதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமங்கலம் கப்பலூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் ஊராட்சி மன்றத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் வெள்ளையன் இவரது மனைவி கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களின் மகன் யுவராஜ் அதே கப்பலூர் கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் பள்ளியில் சிதிலம் அடைந்த கட்டிடங்களில் உள்ள கற்கள் மற்றும் சாய்ந்திருந்த மரங்களை அகற்றுவதற்காக மாணவர்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மரக்குச்சி யுவராஜின் கண்ணில் பட்டதாகவும், அதன் பிறகு யுவராஜ் மருத்துவமனை அழைத்துச் சென்றபோது சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளையன் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டதற்கு யுவராஜின் கண் சரியாவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என கூறியுள்ளனர் ஆனால் அதன் பிறகு எந்தவித சிகிச்சைக்கான உதவியும் செய்யாததால் இது தொடர்பாக வெள்ளையன் கப்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மேலும் மேலும் இது போன்று அந்த பள்ளியில் அடிக்கடி மாணவர்களுக்கு நடப்பதாலும் ஆனால் ஆசிரியர்கள் இதை வெளியே சொன்னால் தேர்வில் தேர்ச்சி அடைய விடமாட்டோம் என்று மிரட்டுவதாகவும் மாணவனின் தந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் தோழர் சந்தனம் அவர்களிடம் கூறியதன் அடிப்படையில் முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பள்ளியில் வேலை செய்ததில் கண் பறிபோன யுவராஜ் சிகிச்சைக்கு நிதி கேட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 60க்கும் மேற்பட்டோர் தற்போது செயலாளர் தாலுகா செயலாளர் நல்லகுரும்பன் தலைமையில் இந்த அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாணவர் பெருமனற மாநில துணைத்தலைவர் விக்ரம், மாநிலக்குழு உறுப்பினர் நாகஜோதி மாவட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணி, மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜ் போன்றோர் மாணவனுக்கு நீதி கேட்டு கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து விடுவித்தபின் கல்விதுறை அதிகார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக