ஏர்வாடி பேரூராட்சி கல்பார் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா கடலாடி ஒன்றியம் ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஏர்வாடி தர்கா கல்பார் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழிகாட்டுதலின்படி நேற்று காலை நகரும் நியாய விலை கடையை கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் தலைமையில் திறந்து வைத்தார்.மாவட்ட கூட்டுறவு பதிவாளர் பிரகாஷ் ராகுல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கோகுல் நகர், ஆதாம்சேரி, கல்பார், எஸ்.கே.நகர்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை,நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜா ராம், ஏர்வாடி இளைஞர் அணி முத்துராஜ்,ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், ஏர்வாடி செயலர் அலுவலர் செல்லத்துரை, ஏர்வாடி தர்கா நியாய விலை கடை பணியாளர் சூர்யா கோகுல் நகர்,ஆதஞ்சேரி, கல்பார், எஸ்.கே.நகர் பகுதி தலைவர்கள் மற்றும் கல்பார் முத்திரையர் இளைஞரணி தலைவர் பாசில், கிளைச் செயலாளர்கள் முனியசாமி, ராமுக்குமார், காளிதாஸ், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக