சௌமியா அன்புமணி சென்னையில் கைது செய்யப்பட்டதை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 2 ஜனவரி, 2025

சௌமியா அன்புமணி சென்னையில் கைது செய்யப்பட்டதை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG-20250102-WA0246


அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் வழக்கு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் முயன்றதாக

பசுமைத்தாயக மாநில தலைவர் சௌமியா அன்புமணி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து,  தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமை தாயக அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். 


அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பாமக சேலம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


இதில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன்,

பசுமைத்தாயக மாநில துணை செயலாளர்,வெங்கடாசலம்,  மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்டத் தலைவர் ராஜமூர்த்தி,

உள்ளிட்ட பலரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மற்றும் சாலை மறியல் கலந்து கொண்டனர். வாழப்பாடி போலீசார் ஐம்பதுக்கு மேற்பட்ட பா.ம.க.,வினரை கைது செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேலன்,  செந்தில்குமார்,பருத்தி மாது, ஆனந்தபாபு,செந்தில்குமார், மாவட்டதுணைசெயலாளர்கள்சீனியம்பட்டி முருகேசன், ஜெயக்குமார்,  வி ஆர் கிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி, இராமாமிர்தம் விலாரிபாளையம் தலைவர் செல்வரானிமணி கெளதமன் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad