கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்கள் வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். ஆர்.பி.உதயக்குமார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்கள் வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். ஆர்.பி.உதயக்குமார்

 

IMG_20250124_142056_826

அதிமுக கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் பூட்டு போடுகிறாரே ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரியாக இருந்திருப்பார் போல எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்கள் வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். ஆர்.பி.உதயக்குமார்.


நீங்கள் தேர்தல் வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கேட்கிறார் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது நீங்கள் நாங்கள் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்திருந்தால் நூறு சதவீதம் நிறைவேற்றி இருப்போம்.

.மின்சார கட்டணம் சொத்துவரி எடப்பாடியார் உயர்த்த வில்லை ஆனால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர் ஸ்டாலின்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி காங்கேயநத்தம் கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் 35 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார் இதனைத் தொடர்ந்து மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் ஏற்பாட்டின் பேரில் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார் முன்னதாக காங்கேயநத்தம் அரசு பள்ளியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வம் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் மாவட்ட நிர்வாகிகள் சரவணபாண்டி சிங்கராஜ் பாண்டியன் மகேந்திரபாண்டி நிர்வாகிகள் கொடிவைரன் சுகுமார் சாமிநாதன் கண்ணபிரான் மாயன் மனோகரன் செல்வா உள்ளிட்ட மாநில மாவட்ட  ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது.

505 வாக்குறுதிகளை கொடுத்தீர்களே என்ன ஆயிற்று என்று கேட்கிறபோது 90% நாங்கள் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம்  என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார் ஆனால் நேற்று சிவகங்கையில் என்ன சொல்கிறார் நாங்கள் வாக்குறுதி கொடுத்தது உண்மை ஆனால் 380 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் 33 க்கும் மேலே துறைகள் உள்ளது ஆகவே இன்னும் நிறைவேற்ற இருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் நீங்கள் எல்லாம் நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கிறார் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது நீங்கள் நாங்கள் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து இருந்தால் புரட்சித் தமிழர் எடப்பாடியார் மக்களுக்காக கொடுத்த வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றுவார்

எல்லா திட்டத்திற்கும் வந்தவுடன் போட்டார் பூட்டு ஒருவேளை கருணாநிதி போன ஜென்மத்தில் பூட்டு வியாபாரி ஆக இருந்திருப்பார் போல திட்டத்திற்கு திண்டுக்கல் பூட்டு போடுகிறார் இருசக்கர வாகனத்திற்கு பூட்டு 2000 அம்மா கிளினிக் பூட்டு மடிக்கணினிக்கு போட்டு கரவை மாடு ஆடுகளுக்கு பூட்டு எல்லாத்துக்கும் பூட்டு போட்டா உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா?
குடிமராமத்து திட்டத்திற்கு பூட்டு எல்லாத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு உங்க வீட்டை மட்டும் திறந்து வைத்துள்ளீர்களே என தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது போராட்டம் நடத்தினார்கள் மின்சார கட்டணத்தை எடப்பாடியார் உயர்த்த வில்லை ஆனால் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார் ஆனால் ஸ்டாலின் மூன்று முறை தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார் சொத்து வரியை எடப்பாடியார் உயர்த்தவில்லை ஆனால் இப்போது ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்துவோம் என்று 150 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள் என சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad