திடீர் பார்க்கிங் வசூல் வெலிங்டன் ராணுவ முகாம் அருகே வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெளிதனில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கல்லூரி உள்ளது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ராணுவ வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது அது மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் தங்கள் வரும் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி செல்வதற்கும் அங்கு அமைந்துள்ள நடைபாதையினை பயன்படுத்தி கொள்கின்றனர். இச்சமயத்தில் கடந்த 1ம் தேதி முதல் எம்ஆர்பி நுழைவு வாயிலின் கேட்டின் முன்பு நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வதற்கு ஏலம். இதனால் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது குறைகளை கூறுகின்றனர். கட்டண வசூலினை தடுத்து மக்களுக்கு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக