ஆண்டிபட்டியில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி . திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

ஆண்டிபட்டியில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி . திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார்கள்

IMG-20250119-WA0276

ஆண்டிபட்டியில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி . திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார்கள் .


தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டியை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். 


அழியும் தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் ஆண்டிபட்டி திமுக மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி‌ சார்பில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. இந்த வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிக்கு தேனி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டியை தொடங்கி வைத்தார்கள். இந்த போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜவா, கதளி, கீரி, ஜா்கா,  கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜோடி சோ்க்கப்பட்டு போட்டி போடப்பட்டது.‌ சுமார் 300க்கும் மேற்பட்ட சேவல்களுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஒரே நேரத்தில் சுமார் 50 வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிகள் நடக்கும் அளவிற்கு இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு, போட்டியில் பங்கேற்க கொண்டு வந்தனா். இதுபோல் பங்கேற்க வந்த சண்டை சேவல்களுக்கு கால்நடை மருத்துவா் பரிசோதனை செய்த பின்னரே, களம் காணும் வகையில், போட்டியில் பங்கேற்க அனுமதித்தனா். இந்த போட்டியில் சேவல்கள் கொண்டை சிலுப்பிக் கொண்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதில்‌ கொத்துதல் மற்றும் பறந்து தாக்குதல் அடிப்படையில் சேவல்கள் தாக்குதல் அடிப்படையில் வெற்றி பெற்றதாக தோ்வு செய்யப்படுகிறது. நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற இந்த வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா, கம்பம் நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய அமைப்பாளர்கள் மலைச்சாமி, சரவணன் இளைஞர் அணியை சேர்ந்த அர்ஜுனன், சிவா மற்றும்‌ ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad