தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பபட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பூர்ணகலா புஷ்பகலா சமேத ஸ்ரீ நீர்காத்த அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெரிய ஓட்டக்காரன், சின்ன ஓட்டக்காரன், கருப்பசாமி -புதியவன், மாடன் -மாடத்தி வீரப்பன், இருளப்பன், வனப் பேச்சி, ராக்காச்சி, கன்னிமார், ஏமராயர், லட்சுமி பெருமாள், தலைமலை - வனத்தாய், வீரபத்தர், வன காளி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமடித்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
முன்னதாக விழாவையொட்டி மகா கணபதி ஹோமம்,வாஸ்து பூஜை, நடைபெற்று, அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் இருந்து புனித நீர் குடம் அழைப்பு செய்து, எந்திர பிரதிஷ்டை, கோபுர கலச பிரதிஷ்டை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை ,முதல் கால, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நீர்காத்த அய்யனார் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம், விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, அபிஷேகம் நடைபெற்று, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனுப்பபட்டி கிராம பங்காளிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக