சந்தப்பேட்டையில் திடக்கழிவு உரக்கிடங்கு கட்டும் செயல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: டி.ஜி. கணேஷ் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

சந்தப்பேட்டையில் திடக்கழிவு உரக்கிடங்கு கட்டும் செயல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: டி.ஜி. கணேஷ் கோரிக்கை

IMG-20250124-WA0109

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் திடக்கழிவு உரக்கிடங்கு கட்டும் பணி நகராட்சி சார்பில்  தொடங்கிய போது அப்பகுதி பொதுமக்கள் அழகிய காய்கறிகள் பழங்களை உரக்கழிவு கட்டிடத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதினால் குடியிருப்பு இல்லாத பகுதியில் கிடங்கை அமைத்திட வேண்டும் என்று இப்பணிக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் ‌ திடக்கழிவு உரக்கிடங்கை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் கலந்து கொண்ட தொழிலதிபரும் சமூக சேவகருமான டி,ஜி, கணேஷ் இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad