அரசு தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ புத்தக கண்காட்சி.
ஆண்டிபட்டி , ஜன.10 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் மருத்துவ புத்தக கண்காட்சி கடந்த 08.O1.2025 முதல் நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சி குறித்து கல்லூரி முதல்வர் முத்து சித்ரா தலைமையில் மருத்துவர்கள் ,பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தேனி மருத்துவக் கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருடம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது .தற்போது நடைபெறும் இந்த அரிதான புத்தகக் கண்காட்சியில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு புத்தக நிறுவனங்கள் கலந்து கொண்டு 8,500 புத்தகங்கள், குறிப்பாக அண்மை (புதிய) பதிப்பு மருத்துவ புத்தகங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
இக்கண்காட்சியில் தினந்தோறும் மருத்துவ பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ இளநிலை மற்றும் முதல் நிலை மாணவர்கள், செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி போதகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பார்வையிட்டு அவரவர் துறைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க பரிந்துரை செய்து வருகின்றனர்.
மேலும் தனியார் மற்றும் வெளிப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார் செய்யும் மற்றும் தேர்ச்சி பெற்ற வெளியிலிருந்து வந்த மாணவர்களும் பார்வையிட்டு பயன்பெற்று வருவதாக தெரிவித்தனர். கண்காட்சியில் குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாஸ்தவ் புக் ஏஜென்சி ,வேலூர் புக் பிளாசா, அகுஜா புக் கம்பெனி, பிரில்லியன்ஸ் பப்ளிஷர் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் ,ப்ரொபஷனல் புக் டிரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் உலக தரம் வாய்ந்த புத்தகங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள் .மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் 20 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்குவதால் கல்லூரி நூலகம் மட்டுமன்றி மாணவர்களும் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது துணை கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த் ,துணை முதல்வர் மணிமொழி, நிலைய மருத்துவ அலுவலர் சிவகுமாரன் ,உதவி நிலைய மருத்துவர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நூலக செயலாளர் பேராசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையிலான நூலக குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக