தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரச நாயக்கனூர் ஊராட்சியில், தலைவர், உபதலைவர், கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிவடைவதால் பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்து, இன்றுடன் நிறைவு பெறுவதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் பணி நிறைவு விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரச நாயகனூரில் நடைபெற்ற பணி நிறைவு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்க்ஷயா தலைமை தாங்கினார். பொம்மிநாயக்கன்பட்டி ஊர் நாட்டாமை ராம்குமார் முன்னிலை வகித்தார். உபதலைவர் பரமன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இந்த ஊராட்சிக்கு மத்திய, மாநில அரசு நிதியிலிருந்தும், ஊரக வளர்ச்சித் துறையில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கப்பட்டு, ஊராட்சி உள்ள கிராமங்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் மகாராசன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .
மேலும் ஊராட்சியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள், வார்டு மெம்பர்கள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அக்ஷயா தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து , தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக