வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

 

IMG-20250112-WA0014

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


விழாவுக்கு கல்லூரி தலைவர் விமல் சந்த் ஜெயின், செயலாளர் ஆனந்த் சிங்வி, தலைவர் வி.திலீப் குமார் ஜெயின் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத்தலைவர் ஶ்ரீபால் குமார் ஜெயின், இணைச் செயலாளர் நவீன் குமார் ஜெயின், பொருளாளர் லலித் குமார் ஜெயின்,கல்லூரி கல்வி ஆலோசகர் முனைவர் டி.பாலசுப்பிரமணியன், தலைமை நிர்வாக அலுவலர் பி.சக்திமாலா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.இன்பவள்ளி அனைவரையும் வரவேற்றார்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர் ஆர்.ருத்திக் ரகுபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் தமிழர்கள் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் புதிய மண் பானையில் பச்சரிசி உலை வைத்து பொங்கி வரும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று கூறி சாமி கும்பிட்டும், பசுக்களை கொண்டு கோபூஜை செய்தனர்.


பின்னர் கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனம்,நாட்டுப்புற கலைகள் ஆகியவை நடைபெற்றது. விழாவில் கல்லூரி பெராசியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad