போப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

போப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா.

போப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா. 

சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜெயரட்சகர் ஆலோசனைப்படி தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஜான்சன் பால் சாலை பாதுகாப்பு சாலை விதிகள் மற்றும் விபத்து குறைப்பு பற்றிய விழிப்புணர்வு விழாவை நடத்தினார். 

ஆரம்ப ஜெபம் ஆக்னஸ் ஆசிரியை செய்தார். தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஜான்சன் பால் வரவேற்புரை நிகழ்த்தினார். 

மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலன் அன்றாடம் நிகழும் சாலை விபத்து குறித்தும், வாகனம் ஓட்டுவதற்கு உரிய வயது 18 எனவும்,பேருந்து படிக்கட்டு பயணம் குறித்தும் கூறி, மாணவர்களை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏறெடுக்க செய்தார்.

சாயர்புரம் காவல் துறை உதவி ஆய்வாளர் சூசை அந்தோணிராஜ் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாது எனவும் சட்ட விதிகளைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றியும், சாலை விதிகளை கடைப்பிடிக்கும் முறைகள் பற்றியும்,

விபத்து குறைப்பு குறித்து அன்றாடம் சமுதாயத்தில் நிலவும் விபத்துகள் அதனால் ஏற்படும் பெற்றோரின் அவலநிலை குறித்தும் கூறி" ஈன்ற பொழுதில் பெரிது வக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்"* என்ற பாடல் வரிக்கேற்ப வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இறுதியில் நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது. தொடர்ந்து பொது மக்களிடம் சாலை பாதுகாப்பு, விபத்து குறைப்பு குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 8,9 வகுப்பு மாணவர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம்,சாரணர் சாரணிய இயக்கம், செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணிதிட்டம் போன்ற இயக்கங்கள் இணைந்த விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பேரணி நடைபெற்றது. 

விழாவை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad