குடியாத்தம் ,ஜன 9 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்
தைப்பொங்கலை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழு உற்பத்தி செய்யும்
பொருட்களின் கட்டாய கண்காட்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுவினர் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி 9-1 2025 முதல் 14. 1: 2025 வரை நடைபெற உள்ளது
இந்த கண்காட்சிக்கு உதவி திட்ட அலுவலர் தனலட்சுமி வாழ்வாதாரம் தலைமை தாங்கினார் வட்டார இயக்க மேலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர் களாக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் மனோஜ் தண்டபாணி
மற்றும் ஒருங்கிணைப்பாளர் கள் ஆனந்தவள்ளி வேல்முருகன் சோபா சகிலா உஷா பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த கண்காட்சியில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயார் செய்யும் பொருட்கள் கைவினை பொருட்கள் பாராம்பரிய அரிசி முதல் நரிக்குறவர்கள் தயார் செய்யும் பொருள்கள் வரை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக