காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்
திருவள்ளுவர் பல்கலையின் சேர்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி!
காட்பாடி , ஜன 3 -
வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த முகாம் துவக்கம்
இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை சார்பில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் நடைபெற்றது.
இந்த முகாமில் வேலூர் பிரிடம்சிடி லயன்ஸ் சங்கம் சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் திட்ட அலுவலர் ஆ.ரூபா தொகுப்புரையாற்றினார். பிரீடம் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் பி.ஆர். சந்திரசேகர், செயலாளர் த.ஜெயவேலு, பொருளாளர் சி.சுப்பிரமணியம் திட்ட இயக்குனர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், எஸ்.ஏழுமலை, மகேந்திரன் பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடை முறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது முன்னதாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் த.சஞ்சீவி மற்றும் கமல் ஆகியோர் இலவச கண் சிகிச்சை முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் கீர்த்தனா, பி.ஷியாம், எஸ்.லாவண்யா, எஸ்.கேசவன், பி.கிரி, ஆர்.தமிழ்செல்வி, எ.வாஸினி, மற்றும் எம்.ஜானகி ஆகியோருக்கு பரிசுகளை செ.நா.ஜனார்த்தனன் மற்றம் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின் ஆகியோர் வழங்கினர். கல்லூரியின் நிதியாளர் திருநாவுக்கரசு கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தட்டச்சர் கீர்த்தனா, உதவி நிரல் அலுவலர் ராஜ்குமார் விரிவுரை யாளர்கள் முனைவர்.இ.இளவரசி, (ஆங்கிலத்துறை) க.சசிகலா (தமிழ்த்துறை) உள்ளிட்டார் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் இம் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 50 தன்னார்வ தொண்டர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக