APADMK கட்சியின் நிறுவனர் & கழக பொதுச்செயலாளர் V..செந்தில்குமார்(VSK) அவர்கள் திருமுருகன் பூண்டி துணை செயலாளராக வி.வடிவேல் அவர்களை நியமனம் செய்தார்.
அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் & கழக பொதுச்செயலாளர்
Dr.V. செந்தில்குமார் (VSK) அவர்களை
திருப்பூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த .V.வடிவேல் அவர்கள் சந்தித்து APADMK கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். அவர் கழக பொதுச்செயலாளர் அவர்களிடம் கழக துண்டு, உறுப்பினர் அட்டை, கழக மாத காலண்டரை பெற்று கொண்டார். மேலும் கழக பொதுச்செயலாளர் V.. செந்தில் குமார்(VSK) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் திருமுருகன் பூண்டி நகராட்சி அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த வி. வடிவேல் அவர்கள் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் அவரை திருமுருகன் பூண்டி நகராட்சி துணை செயலாளராக நியமனம் செய்ய படுவதாகவும் அவர் கழகத்திற்கு விசுவாசத்துடனும், நற்பெயரையும், குன்றாப்புகழும், மாசற்ற மக்கள் சேவை செய்திடவும் நமது கழகத் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் ஆகிய அனைவரையும் அரவணைத்து, அனுசரித்து ஒற்றுமையுடன் கரம் கோர்த்து கழக பணியாற்றி தலைமை கழகத்தின் கரங்களை வலுப்படுத்திட வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தி மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக