மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், கல்வி நிறுவன இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் டாக்டர் பிரகாஷ் ராவ், வைத்தீஸ்வரன் கோயில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி ஆகியோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடங்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். துணை முதல்வர் சரோஜா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக