மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர்கள் டாக்டர் முத்துக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் சுகந்தி வரவேற்று ,ஆண்டு அறிக்கை படித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் குமார் கலந்து கொண்டு 735, மாணவிகளுக்கு பதக்கங்களையும் , பட்டங்களையும் வழங்கி பேசுகையில்: இக் கல்லூரியில் பெரும்பாலான மாணவிகள் கிராமப்புறங்களில் இருந்து கல்வி பயின்று வருவது பெருமைக்குரிய விஷயம். பெண்கள் அனைத்து துறைகளிலும் வலிமை மிக்கவர்களாக விளங்கி வருகின்றனர்.
மாணவிகளாகிய உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள தைரியத்துடன் செயல்பட ஒவ்வொருவரும் குறிக்கோளோடு தனித்துவமாக கல்வி பயில வேண்டும். கிராமத்தில் கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் இந்திய அளவில் பெரிய பெரிய பதவிகளுக்கு செல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் தேவை என்றாலும், தேவையில்லாமல் செல்போன் பயன்பாட்டால் நேரத்தை வீணடிக்க கூடாது.
நாம் எதை அடைய வேண்டுமோ அந்த நிலையை அடைந்த பிறகு அடுத்த நிலைக்கு செல்வதை நிறுத்தி விடக்கூடாது என்றார். விழாவில் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக