கிருஷ்ணகிரி மையப்பகுதியில் அமைந்துள்ளது தாலுகா அலுவலக வளாகத்தில் வட்டார வளர்சி அலுவலகம் தீயணைப்புத்துறை, கிளை சிறைச்சாலை, வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து காவல் துறை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் தினமும் ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இப்படி முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் இந்த விளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட கிரானைட் கல்லுடன் கூடிய கனரக வாகனம் மற்றும் லாரியை, இந்த வளாகத்தில் நிறுத்தி பல வருடங்கள் ஆகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் விஷப்பாப்புகளின் நடமாட்டம் மற்றும் இரவு நேரங்களில் சமுக விரோத செயல்களும் அரங்கேறும் இடமாக இருப்பதல் அலுவலகங்களுக்கு வரும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுகள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும் கடந்த 30 ஆண்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்ளை அப்புறப் படுத்தப்பட வேண்டும் இந்த கனரக வாகனங்களில் உள்ள ராட்ஷச கிரானைட் கற்களால் எப்ப வேண்டுமனாலும் விபத்துக்கள் ஏற்படலாம் ஆகையால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன்னா தாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாலுகா அலுவலகத்தினை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு வந்து செல்லும் வகையில் இருப்பிட வசதி மட்டுமின்றி கழிப்பிட கட்டிடமும் கட்டி கொடுக்க முன்வர வேண்டும் என சமுக ஆர்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக