லாரியில் கிளினராக சென்று விபத்தில் கையை இழந்த மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு முதுமையில் தவிக்கும் பெற்றோர் உதவி கரம் கேட்டு ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

லாரியில் கிளினராக சென்று விபத்தில் கையை இழந்த மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு முதுமையில் தவிக்கும் பெற்றோர் உதவி கரம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

1002256428

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் கீழ்மாத்தூர் ஊராட்சி சேர்ந்த முதியவர் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவரின் ஒரே மகன் செந்தில்குமார் இவர் வறுமையின் காரணமாக அதே ஊரை சேர்ந்த ஜி. வெங்கடேஷ் என்ற லாரி ஓட்டுனரிடம் (கிளீனர்) உதவியாளராக பணிக்கு சென்றுள்ளார்.


கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றபோது லாரியிலிருந்து தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமார் கையில் படுகாயம் அடைந்து அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஒரு மாத காலம் சிகிச்சை பெற்ற பின்னர்  நினைவுத்திரும்பிய போது செந்தில்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது தன் வலது கையில் பாதி கையை காணவில்லை என கதறி உள்ளார் தன் கை அகற்றப்பட்டது தனக்கும் தனது பெற்றோருக்கும் தெரியாது எனவும் கையை இழந்து தற்பொழுது வாழ்வாதாரம் இழந்த நிலையில் முதிர்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது பெற்றோரை வைத்துக்கொண்டு தவித்து வருவதாகவும் தனக்கு இதுவரையில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் காவல் துறையிடம் சென்றால் ஒரிசா சென்று வழக்கு பதிவு செய்து வரவும் என கூறுவதாகவும் இதனால் கடும் மனவேதனையில் இருப்பதாலும் தன்னை லாரியில் உதவியாளராக அழைத்து சென்ற ஓட்டுனரும் கண்டு கொள்ளவில்லை எனவும் எனவே தாங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கதியாய் நிற்பதாலும் கையை இழந்து உள்ளதால் தனக்கு 36 வயதை தாண்டியும் திருமணம் ஆகவில்லை எனவும் மனவேதனை அடைந்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் தனது பெற்றோருடன் சென்று மனு அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad