அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக பசுமைத்தாயக் தலைவர் சௌமியா அன்புமணி கைதை கண்டித்து நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் எதிரே கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பாமகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது யார் அந்த சார் அவரை உடனே கைது செய்ய வேண்டும், மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பாமக பசுமைத்தாயக அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக