சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி "சமூக உணர்வுகள்", "கண்ணீர் அஞ்சலி", "பசுமை", "முயற்சி", "அகதி", "டுடே டெக்ஸ்டைல்" ஆகிய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து, நடித்து, வெளியீடு செய்துள்ளார். "டொனேட்" விழிப்புணர்வு குறும்படத்தை முதன் முதலாக இயக்கி 2025 ஆஸ்கார் விருது போட்டி தேர்வுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் "முதல் மாணவன்", "வைரமகன்", "வீரக்கலை" ஆகிய கருத்து திரைப்படங்களையும் கதை எழுதி, தயாரித்து, நடித்து, வெளியீடு செய்துள்ளார். முட்டை குறித்து "எக்" ஆல்பம், புத்தாண்டின் பிறப்பு குறித்த "நியூ இயர்" பாடலை எழுதி இசை வெளியிட்டுள்ளார். "உச்சம் தொடு", "எம்.ஜி.ஆர் ரசிகன்" திரைப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறார். தற்போது லாரி ஆல்பம் பாடல் எழுதியுள்ளார். லாரி ஆல்பம் இசையை இன்று வெளியிடு செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கோபி காந்தி கூறியதாவது, நாமக்கல்லில் லாரி புகழ்பெற்ற ஒன்றாகும், லாரியைப்பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். லாரி மக்களுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையும், லாரியின் கஷ்டத்தையும் லாரி குறித்த ஆல்பம் பாடல் வரிகளில் எழுதியுள்ளேன். லாரி ஆல்பம் பாடலுக்கு செல்வின் கிறிஸ்டோபர் இசையமைத்து, கம்பீரமான குரலில் பாடியுள்ளார். லாரி ஆல்பம் பாடலை தயாரித்து, இயக்கி, நடித்து உருவாக்க உள்ளேன்.
நாமக்கல்லில் லாரி ஆல்பம் பாடல் லாரிக்கு ஒரு அடையாளமாக இருக்கும் இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக