திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், குப்பை வண்டி வாகன கண்காட்சிக்கு, பொதுமக்களுக்கும் பார்வையிட அனுமதி வழங்குவார்களா? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், குப்பை வண்டி வாகன கண்காட்சிக்கு, பொதுமக்களுக்கும் பார்வையிட அனுமதி வழங்குவார்களா?

photo_2025-01-10_21-57-54

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் கண்ணைக் கவரும் வகையில் ஏராளமான கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்பட வேண்டிய குப்பை வண்டிகள் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர் அவர்களுக்கு மட்டுமே பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


ஒவ்வொரு நாளும் அங்கே வருகின்ற தலைவர்கள் இது நம்முடைய பஞ்சாயத்திற்கு வழங்கப்படுகின்ற வாகனம்!! இது நம்முடைய பஞ்சாயத்திற்கு வழங்கப்படுகின்ற வாகனம்!! தொட்டுப் பார்த்து தடவி ஏக்கத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர். 


கண்ணைக் கவர்கின்ற வகையில் அதிநவீன வாகனமாக குப்பை அள்ளுவதற்கு ஊரக வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ளதால், அதன் இயங்கும் தன்மை பாதிப்படைவதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்திற்கு வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களும், செயலாளர்களும் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad