கோவை கா.கா.சாவடியில் அமைத்துள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியில் 11.01.2025 சனிக்கிழமை அன்று தானிஷ் தமிழ் மன்றம் நடத்திய ஐந்திணை 2025 சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி கல்லூரியின் நிர்வாக இயக்குநர் திரு.கே.ஏ.அக்பர் பாஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக செயல் அதிகாரி திரு.ஏ.தமீஸ் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழர்களின் மகத்துவம் போற்றும் வகையில் சமத்துவ பொங்கல் மாணவர்களால் வைக்கப்பட்டது. மேலும் தமிழர் மரபை மீட்டெடுக்கும் நிகழ்வாக உறியடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சாக்கு ஓட்டம், கோலப் போட்டி, கபடி போட்டி, பட்டி மன்றம் போன்றவை நடத்தப்பட்டன. இப்பொங்கல் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.கே.ஜி.பார்த்திபன் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்து விழாவை சிறப்பிக்க, திரு.R.குணசேகரன் மற்றும் திரு.A.நந்தகுமார் அவர்கள் ஐந்திணை விழாவினை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக