கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையத்திற்கான கட்டிடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ரிப்பன் வெட்டி அலுவலக கட்டிடத்தை மக்களுக்கு அர்ப்பணித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி இ-சேவை மைய கட்டிடத்தை பொதுமக்கள் பணிக்காக அர்ப்பணித்தார் இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உளுந்தூர்பேட்டை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஆணையை அதிகாரிகள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக