திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜோலார்பேட்டை சிறுவிளையாட்டு அரங்கத்தில் இருந்து 13 வயதில் இருந்து 17 வயது உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கொடியசைத்து வைத்தார்.
இது 13 வயது குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் எனவும் மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் எனவும் அதேபோல 15 வயது உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் எனவும் மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் எனவும் மேலும் 17 வயது உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் எனவும் மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் எனவும் மிதிவண்டி போட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு ஐந்தாயிரம், இரண்டாம் பரிசு ரூ 3000, மூன்றாம் பரிசு 2000, என வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, திமுக ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக