கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.கஞ்சா மற்றும் மதுபோதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பெண்கள் மற்றும் பள்ளி முதல் கல்லூரி வரை மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
என்பதைகுற்றம் சாட்டி தமிழக அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் 200க்கும் மேற்ப்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்காததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக