கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம், இங்கு வடலூர் மட்டுமல்லாது கடலூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வியாபாரிகள் தங்கள் கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, புறா உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால வடலூர் கடலூர் செல்லும் சாலையில் சாலையை இருபுறமும் ஆக்கிரமித்தவாறு கோழி சந்தை நடைபெற்று வருகிறது, இது போன்று சாலையை ஆக்கிரமித்தவாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்து வருவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக