கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பள்ளியின் சார்பாக நாட்காட்டி வெளியிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நாட்காட்டியில் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் மாணவர்களின் சிறப்பு செயல்பாடுகள் பள்ளியின் கட்டமைப்புகள் அடிப்படை வசதிகள் அடங்கிய படங்களும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நலமுடன் வாழ 10 கட்டளைகளும், பெற்றோர்களுக்கான கடமைகள் மாணவர்களுக்கான கடமைகள் பள்ளியின் சிறப்பம்சங்கள், கல்வித்துறை சார்ந்த அரசின் 7.5% உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆலோசனை ஆம்புலன்ஸ் போன்றவர்களின் உதவி எண்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதோடு கெரிகேப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மளிகை கடை தேநீர் கடை மெக்கானிக்கல் கடை வங்கி போன்ற மக்கள் கூடும் இடங்களில் நாட்காட்டி வழங்கப்பட்டு வருகிறது.
ஜவுளி கடை நகைக்கடை தனியார் நிறுவனங்கள் தனியார் பள்ளிகள் சார்பாக ஆண்டுதோறும் இது மாதிரியான நாட்காட்டிகள் வழங்குவது வழக்கம். ஆனால் ஒரு அரசு தொடக்கப்பள்ளி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நாட்காட்டி கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கி வருவது புதுமையாகவும் சிறப்பு அம்சமாகவும் கருதப்படுகிறது. இன்று வட்டார கல்வி அலுவலர் கிராமத்துல்லா அவர்களால் நாட்காட்டி வழங்கப்பட்ட நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் சி. வீரமணி அவர்களும் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக