கோவை கா. கா. சாவடி பகுதியில் அமைத்துள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியில் "உயிர் அமைப்பு தொடக்க விழா" மற்றும் தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் திரு.கி.மனுநீதி, நெடுஞ்சாலைகள் பிரிவு பொறியாளர், கோவை. திருமதி. காயத்திரி உதவி பொறியாளர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் சாலை விபத்துக்களைத் தவிர்ப்பது, வாகனம் ஓட்டும் போது கவனச்சிதற்களை அகற்றுதல், சமிக்கைகளை பயன்படுத்துதல் மற்றும் வேகம் அல்லது திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முன் சமிக்கை செய்தல், மது அருந்தி பயணித்தல், தலை கவசம் அனிதல் மேலும் பல சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களிடையே விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் திரு.கே.ஏ.அக்பர் பாஷா தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.அ.தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முனைவர் J.சதீஷ் குமார் சயின்ஸ் & ஹுமானிட்டிக்ஸ் துறை தலைவர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு.தினேஷ் குமார் இணைத்து ஏற்பாட்டு செய்திருந்தனர். கல்லூரியின் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்புற செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக