மதுரை விமான நிலையத்தில் 950கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது.
இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 950 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது.
ரூபாய் 71 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 950 கிராம் தங்கத்தை சுங்க இலகா வான் நுண்ணறி பிரிவினர் கைப்பற்றினார்.
இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்து மதுரைக்கு நேற்று மாலை 4 மணியளவில் மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய சுங்க வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது.
அதனை எடுத்து மதுரை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமானத்தை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர் .
அதில் பயணிகளிடம் எந்தவித தங்கம் கைப்பற்றப் படவில்லை . இதனைத் தொடர்ந்து சுங்க இலக்க வான் நுண்ணறிவு பிரிவினர் விமானத்தில் சென்று சோதனை செய்தபோது விமான கழிவறையில் சுமார் 950 கிராம் எடையுள்ள பேஸ் வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.
அதன் மதிப்பு ரூபாய் 71 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் பயணிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக