தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8வது மாவட்ட மாநாடு சிவகங்கையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8-ஆவது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் தோழர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தின் தோழர் தே. முனீஸ்வரன் அரங்கில் நடைபெற்றது. இதில் அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட இணை செயலாளர் பாண்டி அவர்களும், மாவட்ட துணைத் தலைவர் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.அமைப்பு மற்றும் வேலை அறிக்கையினை மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையினை மாவட்ட பொருளாளர் பெரியசாமி மற்றும் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் வீரையா மாநாடை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓவியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டி, தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிய, புதிய மாவட்ட நிர்வாகிகள் கீழ்க்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெ. பாஸ்கரன், குமரேசன், கார்த்திக், பயாஸ் அகமது, பழனிச்சாமி மற்றும் மாவட்ட இணைச் செயலாளர்கள் மலர்விழி, ஷேக் அப்துல்லா, கலைச்செல்வம், ஷகீலா, சிவா மற்றும் மாவட்ட தணிக்கையாளர்கள் பிச்சை, குமரேசன், பாண்டி ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேனாள் மாவட்ட செயலாளர் பாண்டி நிறைவுரையும், தனபால் நன்றியுரை வழங்கினர்.
மேலும் இம்மாநாட்டில்
1. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
3. வெளிமுகம் மூலம் அரசு பணியாளர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்,
4. மாவட்ட வளர்ச்சி அலுவலர் என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்,
5. புதிய ஊராட்சிகளையும் ஊராட்சி ஒன்றியங்களையும் உருவாக்க வேண்டும்,
6. பெண் ஊழியர் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்,
7. முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களையும் கணினி உதவியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்,
8. தினக்கூலி/ தொகுப்பூதியம்/ மதிப்பூதிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்,
9. பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்சவரம்பினை உயர்த்த வேண்டும்,
10. நீதிமன்ற வழக்குகளுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கும் தனிப்பணியிடம் வழங்க வேண்டும்,
11. ஊரக வளர்ச்சி துறை கணக்கு தேர்வு ஊக்க ஊதிய உயர்வு வேண்டும்,
12. வளர்ச்சித் துறையில் மரணம் அடைந்தவர்களுக்கு கருணைப்பணியிடம் வழங்க வேண்டும், 13. புதிய திட்டங்களுக்கு புதிய பணியிடம் வேண்டும், 14. பதவி உயர்வு தாமதம் என்று வழங்க வேண்டும், 15. சுகாதாரம் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும், 16. மண்டல பயிற்சி நிறுவன மாற்று அரசாணை வெளியிட வேண்டும், 17. ஊராட்சி செயலாளர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக