தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா 1950ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டம் கைவிடப்பட்டு இந்தியா தனக்கென அரசியலமைப்பை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டது.
இது இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா மாறுவதை குறிப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு,
சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப்புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு 7 பள்ளிகளை சேர்ந்த 917 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தூத்துக்குடி 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 436 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 03 பயனாளிக்கு ரூ.3.05,400 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.40,00,000 மதிப்பில் வெள்ளத்தால் பாதிப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு வழங்கும் திட்டம்,
திட்ட அலுவலர் மகளிர் திட்டம் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.2,35,50,000 மதிப்பிலான சுய உதவிக்குழுக்களின் வங்கி கடன் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.26,705/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டி, 10 பயனாளிகளுக்கு ரூ.55,560/- மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 03 பயனாளிகளுக்கு ரூ.20,070/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரம், மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோகள் திட்டம் (கனரக வாகனம்), பாரத பிரமரின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்,
பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ. 99,54,000 மதிப்பிலான நலத்திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (தாட்கோ) சார்பில் 4 பயனாளிக்கு ரூ.2,64,973 மதிப்பிலான நலத்திட்டம்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் 03 பயனாளிகளுக்கு ரூ.3,091/- மதிப்பிலான உபகரணங்கள், கூட்டுறவுத்துறை மூலம் சிறு வணிகக்கடன், சுய உதவிக்குழு கடன், வீட்டு அடமானக் கடன், ஜாமீன் கடன், தொழில் அபிவிருத்தி கடன் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.57,00,000/- மதிப்பிலான நலத்திட்டம் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.4,63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, அலுவலக மேலாளர் (பொது)ரகு மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பயனாளிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு குடியரசு தினத்தை போற்றும் வண்ணம் மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக