சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் .
இந்தியத் திருநாட்டின் 76 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் அது மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்தும் அதை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் இந்த ஆண்டு பணி நிறைவு பெற இருக்கும் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, கணிதத்துறை தலைவர் முனைவர் தனபாலன், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அப்துல் ரஹீம், கல்லூரியின் நிதியாளர் ராஜா மோகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் மாணவிகளின் சார்பில் கொடிப் பாடலும் மும்மதப் பாடல்களும் தேசபக்திப் பாடல்களும் பாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சார்பில் பரதநாட்டியம், கிராமிய நடனம், பேச்சு, சிலம்பம் சுற்றுதல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும் ஆசிரியரல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் சரவணன் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வமீனா, நுண்கலை மன்ற உறுப்பினர் முனைவர் ஷர்மிளா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லட்சுமணகுமார், முனைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக