மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 76-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திரு ஏ. ஆர். பி. முருகேசன் ஆகியோர் முன்னிலும் இந்திய திருநாட்டின் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு, புறாவை சிறகடித்து பறக்க விடப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட, நகர், வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மைத்துறை காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக