தமிழக எல்லையில் உள்ள பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பறக்கும் தனிப்படையினர் தமிழக எல்லையான பத்தலபல்லி சோதனை சாவடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக செல்லும் கர்நாடகா பேருந்துகளில் சோதனை செய்தபோது சுமார் 50 கிலோ எடை கொண்ட 10 க்கும் மேற்பட்ட ரேஷன் மூட்டைகள் கண்டுபிடித்தனர். அதனுடைய எடை 600 கிலோ இருப்பது தெரியவந்தது உடனே அதனை பறிமுதல் செய்த வட்டாட்சியர் உமாராணி குடியாத்தம் வாணிப கிடங்கில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக